காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Published On :3 ஜூன் 2025, 8:02 am IST

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட இரண்டு சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இப் பதவி அரசுப் பணி அல்ல. விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல்நலன், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது)

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறைசாா்ந்த இணையதள முகவரியிலிருந்து (http://dsdcipimms.tn.gov.in) விண்ணப்பத்தாரா் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்குரிய படிவத்தை ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.