வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பரோடா வங்கி
பரோடா வங்கி
Published on
Updated on
1 min read

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். BOB/HRM/REC/ADVT/2025/02

பணி: Specialist Officers (Senior Manager, Manager Officer)

காலியிடங்கள்: 518

சம்பளம்: மாதம் ரூ. 48.400 முதல் ரூ. 67, 160

Sреcialist Officer விண்ணப்பிக்கலாம்

வயதுவரம்பு: 1.2.2025 தேதியின்படி முதுநிலை மேலாளர் பணிக்கு 27 முதல் 37 வயதிற்குள்ளும், Manager Officer பணிக்கு 22 முதல் 32-க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்பவும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியில் துறையில் கணினி அறிவில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல். சந்தையியல் பிரிவில் எம்பிஏ, எம்சிஏ, சந்தையியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருப்பதுடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.100. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை www.bankofbaroda in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.3.2025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com