புதுசேரி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு எண். PU/RC/NT/2026/51
இதர விவரங்கள் கீழ்கண்டவாறு:
பணி: Deputy Registrar
காலியிடங்கள்: 3
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Registrar
காலியிடங்கள்: 3
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Public Relation Officer
காலியிடங்கள்: 1
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Section Officer
காலியிடங்கள்: 8
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் கணினியில் பணியாற்றுவதில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Private Secretary
காலியிடங்கள்: 2
தகுதி
ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருப்பவராகவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1,000. இதர அனைத்து பிரிவினர் ரூ.2,000. பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை https://pondiunint.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
The Assistant Registrar, Recruitment Cell, Pondicherry University, Dr.B.R.Ambedkar Administrative Building, R.Venkataraman Nagar, Kalapet, Puducherry. PIN:605 014
மேலும் விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு recruitment@pondiuni.ac.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Pondicherry University invites online Applications from eligible candidates for appointment to various Non-Teaching positions (Group A and B) on Direct Recruitment/ Deputation basis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


