தில்லி ராணுவக் குடியிருப்பில் காலியாகவுள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026
பணி: Assistant Engineer
பிரிவு: Civil
காலியிடங்கள்: 2
பிரிவு: Mechanical
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer
பிரிவு: Civil
காலியிடங்கள்: 5
பிரிவு: Electrical
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://delhi.cantt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வயதுச் சான்று, கல்வித் தகுதிச் சான்று, இடஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் (தேவையெனில்) மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை இணையவழி விண்ணப்பப் படிவத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from eligible candidates, which shall be submitted online only through the official website...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










