பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள புராஜெக்ட் பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : MIL/OFN/GA/SUP/2026/1
பணி: Project Engineer
காலியிடங்கள்: 12
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ. 36,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.37,080, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.38,192, நான்காம் ஆண்டு மாதம் ரூ.39,338
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.munitionsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொம் செய்து, அதனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படம் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Chief General Manager, Ordnance Factory Nalanda, Rajgir (Bihar), Pin-803 121.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 22.7.2026
Summary
Inviting Applications for Project Engineer Post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் 'ப்ராஜெக்ட் பெல்லோஷிப்' பணி

அண்ணா பல்கலையில் புராஜெக்ட் அசோசியேட் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆயுதத் தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan




