/

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை; காலியிடங்கள்: 1213

ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை - கோப்புப்படம்

Updated On :24 ஜூலை 2026, 9:54 am IST

சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் கீழ்வரும் காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவங்கள் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : AVNL/CO/HR/2026/06

பணி: Junior Technician

காலியிடங்கள்: 1213

சம்பளம்: மாதம் ரூ.25,050

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு பிரிவுகளில் இளநிலைப் பட்டம், ஐடிஐ டிரேடுகளில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆயுத தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 24.7.2026 தேதியின் படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. பகுதி 1- ல் General Awareness, General English,Quantitative Aptitude, Reasoning Ability,Computer Aptitude போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பகுதி II-ல் ஐடிஐ பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு கொள் குறிவகை கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்திநர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

AVNL Chennai Recruitment 2026 for 1213 Junior Technician Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.