அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனம், 1981 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி புவணேஸ்வரில் தனது பதிவு அலுவலகத்துடன் தொடங்கப்பட்டது. இது நாட்டின் மிகப்பெரிய பாக்சைட், அலுமினா, அலுமினியம் மற்றும் மின் உற்பத்தி வளாகங்களில் ஒன்றாகும். தற்போது, நால்கோவின் பங்கு மூலதனத்தில் 51.28 சதவீதத்தை மத்திய அரசு தன்வசம் வைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் புவணேஸ்வரில் காலியாக உள்ள பல்வேறு நிர்வாகம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணி: Non-Executive Posts
மொத்த காலியிடங்கள்: 268
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Operator (HEMM) Gr. III – 6
பணி: Mining Mate Gr. III – 21
பணி: Jr. Foreman (Mines) – 8
பணி: Jr. Foreman (Electrical) – 3
பணி: SUPT(JOT)-Operator – 55
பணி: Operator Gr. III – 54
பணி: SUPT(JOT)-Fitter – 12
பணி: Technician (Fitter) Gr. III – 13
பணி: SUPT(JOT)-Electrical – 35
பணி: Technician (Electrical) Gr. III – 35
பணி: SUPT(JOT)-Laboratory – 6
பணி: பணி: SUPT(JOT) – Instrumentation/ Instrument Mechanic – 10
பணி: Technician (Instrumentation,Instrument Mechanic) Gr. III – 10
தகுதி: Junior Operator Trainee, Technician,Operator (HEMM)பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter,Electrical,Instrumentation,Instrument Mechanic, HEMM Operator, Motor Mechanic போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: Junior Foreman, Electrical பணிக்கு Mining, Mining Mate,Mining,Electrical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Mining Engineering முடித்தவர்கள் டிஜிஎம்எஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
தகுதி: Junior Operator Trainee (Lab)பணிக்கு விண்ணப்பிப்போர் வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்: Foreman பணிக்கு மாதம் ரூ.36,500, இதர பணிகளுக்கு ரூ.29,500
வயது வரம்பு: 10.6.2026 தேதி யின்படி, Junior Operator பணிக்கு 27-க்குள்ளும், HEMM Operator பணிக்கு 35-க்குள்ளும், Foreman பணிக்கு 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NALCO Notification for 268 Operator,Technician Vacancies...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வினா - விடை வங்கி... விஜயநகரப் பேரரசு! - 3

இந்தியா செக்யூரிட்டி பிரஸ்-ல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி




