இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ஐஆர்சிடிசியின் வடக்கு மண்டலத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 'Hospitality Monitors'பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு கலந்துகொள்ளலாம். தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கும்; தேவை மற்றும் திருப்திகரமான பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்படலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 2026/IRCTC/NZ/HRD/Contractual/ Hospitality Monitor
பணி: Hospitality Monitor
காலியிடங்கள்: 92
வயதுவரம்பு: 1.5.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும். ரயிலில் பணிபுரியும் நாள்களில் 12 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால் ஒரு நாளைக்கு ரூ. 350 வழங்கப்படும். 6 முதல் 12 மணி நேரம் வரை பணிபுரிந்தால் 70%, மற்றும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகப் பணிபுரிந்தால் 30% வழங்கப்படும்.
வெளியூரில் இரவு தங்க நேரிட்டால் மட்டும் ரூ. 240 வழங்கப்படும். (நடைமுறையில் உள்ள கொள்கையின்படி விடுமுறை நாள்களில் பணிபுரிந்தால் மட்டும்).
மருத்துவக் காப்பீடு: நடைமுறையில் உள்ள கொள்கையின்படி மாத அடிப்படையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
தகுதி: Hospitality and Hotel Management, Culinery Arts, Catering Science,Tourism, Hotal Administration போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.எஸ்சி, பி.பி.ஏ, எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு 'நடைபெறும் நாள்: ஜூன் - 3 முதல் ஜூன் - 24 ஆம் தேதி வரை. தேதி வாரியாக நேர்முகத் தேர்வு நடை பெறும் இடங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்,சமீபத்திய 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IRCTC, North Zone Invites Eligible and Qualified candidates to appear for walk-in-interview for engagement as ‘Hospitality Monitors’ on Contract basis for a period of 2 years initially and...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசு
விண்ணப்பித்துவிட்டீர்களா..?பொதுத்துறை வங்கியில் வேலை!

நர்சிங் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




