/

டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து..

News image

டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 1:53 pm IST

நாடு முழுவதும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் டெட் தேர்வுக்கு எதிரான மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பணியில் தொடரும் அல்லது பதவி உயர்வு பெறும் அனைத்துப் பணிபுரியும் மற்றும் ஆசிரியராக விரும்புபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (டெட்) கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை 2028 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நம்பிக்கையளிக்கும் முக்கியமான முடிவாகும்.

2025 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, டெட் தேர்வு தொடர்பான பகுதியை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு மாநிலங்கள், ஆசிரியர் சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்கள் என சுமார் 70 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு கட்டாய விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியதுடன், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

மறுஆய்வு மனுதாரர்களான ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், நாங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்கிறோம். இருப்பினும், உணரப்பட்ட பாதுகாப்பின்மை உணர்வு, இந்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்கப் போதுமான காரணம் அல்ல. ஆனால், இதற்கான காலக்கெடுவை 2027 ஆகஸ்ட் 31 இல் இருந்து, 2028 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற தனது 2025 ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதில், 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியருக்கு மட்டும் விலக்கு தரப்பட்டது. மற்றவர்கள் 2 ஆண்டுகளில் ‘டெட்’தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் கட்டாய ஓய்வு வழங்கும்படி தெரிவித்திருந்தது. மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நலனைப் பாதுகாக்க, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2026 ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த டிஆர்பிக்கு அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பல ஆசிரியர்கள் நீண்ட காலமாக பள்ளிகளில் பணியாற்றி வந்தாலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களின் பணிநிலை, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Summary

The court said the limited relief of an extended deadline till August 31, 2028 was a move to strike a balance between these concerns.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.