மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 44 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

News image

தூத்துக்குடி மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி - தமிழ்நாடு அரசு

Updated On :20 ஜூன் 2026, 7:30 am IST

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 44 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு இன்றே(ஜூன் 20) கடைசி நாளாகும்.

இது குறித்த விவரம் வருமாறு :

பணி: Medical Officer

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 63,000

தகுதி : மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Health Inspector Grade - II

காலியிடங்கள் : 9

சம்பளம் : மாதம் ரூ. 17,500

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து Multipurpose Health Wormer பிரிவில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Radiogra-pher

காலியிடங்கள் : 3

சம்பளம்: மாதம் ரூ.17,000

தகுதி : Radio Diagnosis Technology பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Nursing Assistant

காலியிடங்கள் : 4

சம்பளம் : மாதம் ரூ.6,000

தகுதி : நர்சிங் அசிஸ்டென்ட் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Therapeutic Assistant (Female)

காலியிடம்: 1

சம்பளம் : மாதம் ரூ.13,000

தகுதி: Nursing Therapy பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 59-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Operation Theatre Technician

காலியிடங்கள் : 3

சம்பளம் : மாதம் ரூ.6,000

தகுதி: Operation Theatre Technician பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ANM

காலியிடம்: 1

சம்பளம் : மாதம் ரூ.17,500

தகுதி : ANM படித்து நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Programcum Administrative Assistant

காலியிடம் :1

சம்பளம் : மாதம் ரூ. 20,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் MS Office-ல் நல்ல அறிவுத்திறனும், ஒரு ஆண்டு பணி அனுபவமும் மற்றும் Accountancy-ல் நல்ல அறிவுதிறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Van Cleaner

காலியிடம்: 1

சம்பளம்: ரூ. 11,000

தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Hospital Worker (Multipurpose)

காலியிடங்கள்: 9

சம்பளம் : மாதம் ரூ. 11,000

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dental Technician

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.9,500

தகுதி: Dental Technology பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Occupational Therapist

காலியிடம்: 1

சம்பளம் : மாதம் ரூ.23,000

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்

தகுதி : Occupational Therapy-ல் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Guard

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.8,500

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.thoothukudi.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 20.6.2026

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி

மாவட்ட சுகாதார அலுவலர், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி மாவட்டம் - 628 002.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Summary

Today is the last day to apply for paramedical positions at health centers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.