காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தவெக அரசும் இப்படியா? குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

தவெக அரசும் இப்படி செய்தால் எப்படி என புலம்பும் வகையில் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

குரூப் - 1 பணியிடங்கள்

Published On :

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருப்பதன் மூலம், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய மன நெருக்கடியை ஏற்படுத்தும்.

PDF
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பார்க்க

இதற்கு முன்பு, 70 அல்லது 90 காலிப் பணியிடங்களுக்காக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதுவே இளைஞர்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதுவார்கள். இந்த முறை அதனை விடவும் குறைவாக வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், துணைப் பதிவாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாக, ஆண்டு திட்ட அட்டவணைப்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமும் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.