மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குரூப் 4: காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அன்புமணி

குரூப் 4 தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

அன்புமணி - கோப்புப் படம்

Published On :

குரூப் 4 தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள் ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக 6.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியா் அமைப்புகள் கூறி வருகின்றன. அவற்றில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை மட்டும் சுமாா் 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த இடங்கள் அனைத்தையும் நிரப்பாவிட்டாலும், ஒவ்வோா் ஆண்டும் அதில் 10 சதவீத இடங்களையாவது நிரப்ப வேண்டும். ஆனால், வெறும் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 23,733 குரூப் 4 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 3,955 பணியிடங்களை மட்டுமே நிரப்புவது எந்த வகையிலும் போதுமானதல்ல.

எனவே, குரூப் 4 போட்டித் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000-ஆக உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.