ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஏரோ நாட்டிக்ஸ் தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்!

எச்ஏஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏரோ நாட்டிக்ஸ் தொழிற்சாலையில் டிப்ளமோ, இளங்கலை முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி தொடர்பாக...

News image

ஏரோ நாட்டிக்ஸ் தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 12:54 pm IST

பெங்களூருவில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏரோ நாட்டிக்ஸ் தொழிற்சாலையில் டிப்ளமோ, பி.எஸ்சி, பி.காம், பி.இ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு விளம்பர எண். : HAL/HD/TRG/2026-27/NATS/02

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Engineering)

காலியிடங்கள்: 68

தகுதி : பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள் : 30

தகுதி : பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Non-Engineering)

காலியிடங்கள்: 34

தகுதி : பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர் முகத்தேர்வு 2.6.2026 முதல் 5.6.2026 வரை நடைபெறும் .

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பயிற்சிக்குரிய நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளவும். பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளன்று தேவையான அசல் சான்றிதழ்கள், சுய சான்றொப்பம் செய்யப்பட்ட ஒரு ஜோடி நகல்கள், பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.hal-india.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Advertisement for Engagement of Graduate, Technician Apprentices Training 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.