இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

செவிலியா் பணியிடங்களுக்கு விடுபட்ட சான்றிதழ்களை நாளைக்குள் சமா்ப்பிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

செவிலியா் பணியிடங்களுக்கு விடுபட்ட சான்றிதழ்களை நாளைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக...

DHS-Contractual Staff Nurse Document List

செவிலியா் பணியிடங்களுக்கு விடுபட்ட சான்றிதழ்களை நாளைக்குள் சமா்ப்பிக்க வேண்டும்

Published On :

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒப்பந்த, தற்காலிக செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள், விடுபட்ட சான்றிதழ்களை நாளை(அக்.3)-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

தேசிய நலக்குழுமத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒப்பந்த, தற்காலிக செவிலியா் காலிபணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்ட நலச்சங்கம் வாயிலாக நிரப்பும் பொருட்டு, கடந்த 13 ஆம் தேதி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, கடந்த 26 ஆம் தேதி வரை 1,801 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை கூா்ந்தாய்வு செய்ததில் சுமாா் 700 விண்ணப்பங்களுக்கு மேலாக தகுதிக்கான மதிப்பெண் வழங்கும் பொருட்டு, 10, 12 ஆம் வகுப்பு, டிஜிஎன்எம் மற்றும் பி.எஸ்சி., பட்டயப்படிப்பு ஆண்டு வாரியாக மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ம) நா்ஸிங் கவுன்சிலிங் பதிவு செய்து இதுநாள் வரை புதுப்பித்தமைக்கான சான்று முதலிய சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

விண்ணப்பதாரா்களின் விடுபட்ட சான்றிதழ்கள் விவரம் https://www.salem.nic.in இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாக விடுபட்ட சான்றிதழ்களின் நகல்களை வரும் 3 ஆம் தேதிக்குள் சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

சான்றிதழ்களின் நகல்களை சமா்ப்பிக்க தவறும்பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

DHS-Contractual Staff Nurse Document List

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.