தொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

TN NHM Recruitment for 4724 Staff Nurse Posts

அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - கோப்புப்படம்

Published On :

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களை தற்​காலிக​மாக நிரப்​பப்​பட​வுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு இயக்​கத்​தின் கீழ் பொது சுகாதா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்​துத்​துறை, மருத்​து​வம் மற்​றும் ஊரக சுகா​தா​ரப் பணி​கள், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி, சென்னை மாநக​ராட்சி ஆகியவற்​றின் கீழ் உள்ள மருத்து​வ​மனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவகத்தில் வரவேற்கப்படுகின்றன.

தற்போது தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் நடைமுறையில் உள்ள திருப்​பூர் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களைத் தவிர, இதர மாவட்​டங்​களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்​கங்​களின் கீழ்செயல்​படும் அனைத்து சுகா​தார நிலை​யங்​கள், மருத்​து​வ​மனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்​பப்பட உள்ளன.

தற்​காலிக அடிப்​படை​யில் ஒப்​பந்த முறை​யில் நிரப்​பப்​பட​வுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் செவிலியர் பட்டய படிப்பு(ஜிஎன்எம்) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்(பி.எஸ்சி நர்சிங்) பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயதுவரம்பு 25.9.2026-ன்படி 50க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும்.

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: சென்னை - 512, சேலம் - ஆத்தூர் - 231, திருச்சி - 205, திருவண்ணாமலை - செய்யாறு - 197, கோவை - 193, திருவள்ளூர் - பூந்தமல்லி - 178, கடலூர் - 172, ஈரோடு - 169, தஞ்சாவூர் - 166, திண்டுக்கல் - பழனி - 161, புதுக்கோட்டை - அறந்தாங்கி- 158, திருவாரூர் - 156, தருமபுரி - 152, மதுரை - 147, விருதுநகர் - சிவகாசி - 129, நாமக்கல் - 128, தூத்துக்குடி - கோவில்பட்டி - 126, சிவகங்கை - 120, தேனி - 119, கிருஷ்ணகிரி - 111, நீலகிரி - 111, திருநெல்வேலி - 101, கரூர்- 99, விழுப்புரம் - 94, தென்காசி - 76, வேலூர் - 75, கள்ளக்குறிச்சி - 74, நாகப்பட்டினம் - 70, ராமநாதபுரம் - 66, பரமக்குடி - 65, திருப்பத்தூர் - 65, ராணிப்பேட்டை - 64, அரியலூர் - 61, காஞ்சிபுரம் - 48, பெரம்பலூர் - 45, மயிலாடுதுறை - 41, நாகர்கோவில் - 39.

தகுதியானோர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப படிவுங்களை தேசிய நலவாழ்வு இயக்கத்தின் https://nhm.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்​துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும், அந்​தந்த மாவட்ட சுகா​தார அலு​வலருக்கு செப்​.25 ஆம் தேதி மாலை 5 மணிக்​குள்​ அனுப்​ப வேண்​டும்​.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

TN NHM Jobs Recruitment 2026 for 4724 Staff Nurse Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.