முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையில் காவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையில் 126 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

ITBP Recruitment 2026

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையில் காவலர் பணி - ITBP

Updated On :

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையில் 126 காவலர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விரங்கள் பின்வருமாறு...

பணி: Constable [General Duty (Sports Quota)-2026]

காலியிடங்கள்: 126

வயது வரம்பு: 1.11.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 -69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழகங்கள் அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விளையாடி குறைந்தது 3 ஆவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 1.1. 2024 - 1.11.2026-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெற்ற வெற்றிகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடை பெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

உடற்தகுதி விவரம்:

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் (எஸ்டி - 162.5 செ.மீ). மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் . (எஸ்டி- 150 செ.மீ). மேலும் உயரத்திற்கேற்ற உடல் எடையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Online Applications are invited from eligible Male and Female Indian citizens (including subject of Nepal & Bhutan) possessing educational qualification & age as prescribed below for filling up following vacancies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.