
விண்ணப்பித்துவிட்டீர்களா..? இஸ்ரோவில் சயின்டிஸ்ட், பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 175 சயின்டிஸ்ட், பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

இஸ்ரோவில் சயின்டிஸ்ட், பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - கோப்புப்படம்
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 175 சயின்டிஸ்ட், பொறியியல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.16-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ISRO: IGRB: 03(EMC) 2026
பணி: Scientist/Engineer (SC)
காலியிடங்கள்: 175
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வில் டெக்னிக்கல் அறிவு, பொது அறிவு, தொடர்புகொள்ளும் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய முழு விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. தேர்வு கட்டணம் ரூ.750. கட்டணத்தை BHA-RATKOSH Payment முறையின் கீழ் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்விற்கு வரும் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இதர பிரிவினர்களுக்கு தேர்வு கட்டணத்தில் ரூ.500 திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.9.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online applications are invited from meritorious graduates for the following vacancies of Scientist/Engineer ‘SC’ (Group ‘A’ Gazetted posts)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








