
என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் காலியாகவுள்ள மூத்த உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் மூத்த உதவிப் பொறியாளர் பணி - கோப்புப்படம்
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் காலியாகவுள்ள மூத்த உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.22-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01 / 2026
பணி: Sr.Assistant Officer (HR)
காலியிடங்கள்: 4
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மனித வளம், தொழில் உறவுகள், பணியாளர் மேலாண்மை ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sr.Asistant Officer (Law)
காலியிடம்: 1
தகுதி: சட்டத் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr.Assistant Engineer
பிரிவு: Electrical - 4
பிரிவு: Mechanical - 4
பிரிவு: C & I - 2
பிரிவு: IT/ERP - 2
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரவியல், உற்பத்தி, மின்னணுவியல், கட்டுப்பாடு மற்றும் கருவியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய ஏதாதொரு பிரிவில் பிஇ , பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,400
வயதுவரம்பு: 22.9.2026 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NSPCL SAIL Recruitment 2026 for 17 Senior Assistant Engineer Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








