இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

சூரிய ஆற்றல் நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

SECI Recruitment 2026

சூரிய ஆற்றல் நிறுவனத்தில் வேலை - படம்: SECI

Published On :

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அட்டவணை ‘ஏ’அந்தஸ்து கொண்ட ‘நவரத்னா’பொதுத்துறை நிறுவனம் சூரிய ஆற்றல் நிறுவனம். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமலாக்க முகமைகளில்’ஒன்றாக எஸ்இசிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் செப்.23-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்களைப் பார்ப்போம்....

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 03/2026

பணி: Deputy Manager

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சோலார், பவர் சிஸ்டம், கணினி அறிவியல், ஐடி போன்ற ஓரு துறையில் பிஇ., பிடெக் முடித்து 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accounts Officer

காலியிடம்: 1

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் நிதியியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer

பிரிவு : Legal -1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சம்

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பிரிவு: HR & Admin

காலியிடங்கள்: 2

வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் எல்எல்பி அல்லது எச்ஆர்எம், ஐஆர், பணியாளர் மேலாண்மை, தொழிலாளர் நலன், தொழிலாளர் நிர்வாகம், தொழிலாளர் ஆய்வுகள் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer (Corporate Planning)

காலியிடம்: 1

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,0000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Engineer

காலியிடங்கள்: 11

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9.9 -11.7 லட்சம்

வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager

காலியிடங்கள்: 7

வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.11.47 -13.3 லட்சம் வரை

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.seci.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Solar Energy Corporation of India Limited invites online recruitment applications through Solar Energy Corporation of India Limited

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.