ரூ.1,51,100 சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் நிரப்பப்பட உள்ள துணைப்பிரிவு பொறியாளர், ஜூனியர் டெலிகாம் அதிகாரி, தனி உதவியாளர், சுருக்கெழுத்தர் கிரேடு ‘சி’ பணிக்கான 14 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Department of Telecommunication
பணி: Sub Divisional Engineer -7
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
பணி: Junior Telecom Officer - 2
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
பணி: Personal Assistant
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
பணி: Stenographer Grade ‘C’
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, டிப்ளமோ, பி.இ., பி.டெக் என அறிவிக்கப்பட்டுள்ள பணித்தொடர்பான ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் (பிரதிநிதித்துவம்) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
O/o The Senior Deputy Director General, DoT, Gujarat LSA 1st Floor, P & T Admin Building, Khanpur, Ahmedabad - 380001 Gujarat.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

