ரூ.32,000 சம்பளத்தில் குவைத்தில் வேலை: தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (ஓஎம்சிஎல் சென்னை) 500 வீட்டுப் பணிப்பெண் வேலைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டில் வேலை தேடும் ஆர்வமுள்ள பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிறுவனம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்(OMCL Chennai)
பணியிடம்: குவைத்
பணி: வீட்டுப் பணிப்பெண்(House maid)
காலியிடங்கள்: 500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 29,500 - ரூ. 32,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட். எண்.32, திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை: https://www.omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.03.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

