இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? 

இந்து சமய அறநிலையத்துறை சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சுசித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? 


இந்து சமய அறநிலையத்துறை சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சுசித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கணினி இயக்குபவர் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700

பணி: மின் பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

பணி: அர்ச்சகர் நிலை 2 - 1
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 39,900

பணி: ஓதுவார் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

பணி: சுயம்பாகி - 1
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800

பணி: மேளக்குழு நாதஸ்வர பணிக்கும் மட்டும் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700
 
பணி: பகல் காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

பணி: இரவு காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

பணி: துப்பரவாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
செயல் அலுவலர், அருமிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை-14

மேலும் விவரங்கள் அறிய hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com