ரூ.37,700 சம்பளத்தில் தமிழக அரசில் ஆய்வாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
By DIN | Published On : 20th October 2022 02:33 PM | Last Updated : 20th October 2022 02:33 PM | அ+அ அ- |

தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர்(மீன்வள மீன்வள நலத்துறை) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மீன்துறை ஆய்வாளர்
காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: மீன்வள அறியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வளர்ப்பு அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடற்கரை
இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.
கட்டண விவரம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.11.2022
கணினிவழித் தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.