

கரூர் மாவடடம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மைய நிர்வாகி - 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் ஆலோசனை உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை ஆலோசகர் - 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வழக்குப்பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://karur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.4,2023
மேலும் விவரங்களுக்கு https://karur.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.