தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 7:47 am

தினமணி

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: நிர்வாக உதவியாளர் 

காலியிடங்கள்: 1,773

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவதற்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது உயர்நிலை கல்வியாகவோ அல்லது கணினி சார்ந்த சான்றிதழ் படிப்பாகவோ பயின்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://cag.gov.in என்ற இணையதளத்தின் மூலம் செப்-17 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-064e7307040d1e6-69903981.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.