ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?

சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள், தேடுபொறி போன்ற புரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?


 
சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள், தேடுபொறி போன்ற புரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 

நிறுவனம்: சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)

பணி: Marketing for MSME & NRI Business
பணி: Social Media
பணி: Search Engine Optimisation

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, பி,டெக்முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு சம்பளமாக ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com