இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Archagar - 1
பணி: Ticket Seller - 1
பணி: Night watchman - 1
பணி: Thiruvakagu - 1

தகுதி: அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1 ஆண்டு பயிற்சி பெற்று தமிழில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர  பணிகளுக்கு தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023  தேதியின் படி18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து  கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயல் அலுவலர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், காவிரி கரைபாளையம் ஈரோடு-635 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிதேதி: 30.6.2023.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com