தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்... குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள  "குரூப்- சி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2023, 9:51 am

தினமணி

தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள  "குரூப்- சி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technician-1 
காலியிடம்: 20
சம்பளம்: ரூ.19,900 - 63,200
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  அறிவியியல் பாடத்தில் 55%  மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சியுடன் எம்எல்டி, கணினி, புள்ளியியல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff 
காலியிடம்: 8
சம்பளம்: ரூ.18,000 - 56,900
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.(எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு
5 ஆண்டும் , ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும் சலுகை வழங்கப்படும்)

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. இதனை The Director,NIRESH என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.  எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  www.icmr.nic.in அல்லது www.niresh.icmr.org.in   என்ற இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து  கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, ICMR-National Institute for Research in Environmental Health , Bhauri Bypass Road, Bhopal-462 030.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.07.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.