டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டது.

மேலும், மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் மேலாக உள்ளதாகவும், பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டு,  எவ்வித தவறுகளுக்கும் இடம்தராமல், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com