சவுதி அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
சவுதி அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
Published on
Updated on
1 min read



சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் காலியாக செவிலியர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி(நர்சிங்) முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் 35 வயதிற்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

அந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தில்லி, பெங்களூரு, கொச்சின் ஆகிய இடங்களில் வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெறும். 

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டில் வேலையளிப்பவர்களால் வழங்கப்பட்டும். 

மேலும், சம்பளம் மற்றும் பணி விவரங்களை தெரிந்துகொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன 9566239685, 6379179200, 044-22505886, 044-22502267 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 

இந்த வெளிநாட்டு செவிலியர் வேலைக்கு எந்தவொரு இடைத்தரகரோ, ஏஜென்டோ இல்லை. 

விரும்புள்ள தகுதியானோர் நேரிடையாக பதிவு செய்து பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். 

இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். 

இந்த பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிய www.omcmanpower.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com