விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்த்துறையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், பல் நோக்கு சுகாதார பணியாளர்கள், பல் மருத்துவர், தர அலுவலர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!


தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்த்துறையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், பல் நோக்கு சுகாதார பணியாளர்கள், பல் மருத்துவர், தர அலுவலர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து நாளை செவ்வாய்க்கிழமைக்குள் (பிப்.21) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நகர்புற நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: மருத்துவ அலுவலர்கள்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.14,000

தகுதி: தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி: எட்டாம் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, எல்ஐசி கட்டடம் அருகில், தஞ்சாவூர், 613 001. தொலைபேசி எண்: 04362 -273503


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவ உதவியாளர்கள் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பல் மருத்துவர்கள் - 3
தகுதி: பல் மருத்துத் துறையில் பிடிஎஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: பல் மருத்துவ உதவியாளர்கள் - 3
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நலச்சங்கத்தில் காலியாக உள்ள மாவட்ட தர அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மாவட்ட தர அலுவலர்(தற்காலிமானது) 
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பல், ஆயுஷ், நர்சிங், சமூகவியல், வாழ்க்கை அறிவியல் பிரிவில் பட்டம் மற்றும் மருத்துவமனை நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம்,
பொது சுகாதாரம் (எம்பிஎச்), சுகாதார மேலாண்மை (எம்எச்எம்) போன்ற ஏதாவதொன்றை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டு அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.2.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com