ரூ.1,16,600 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
By | Published On : 19th July 2023 04:05 PM | Last Updated : 19th July 2023 04:05 PM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக்கொண்டுள்ளது.
பணி: ஆராய்ச்சி உதவியாளர்(புள்ளியியல்) - 1
பணி: ஆராய்ச்சி உதவியாளர்(பொருளாதாரம்) - 1
பணி: ஆராய்ச்சி உதவியாளர்(புவியியல்) - 1
பணி: ஆராய்ச்சி உதவியாளர்(சமூகவியல்) - 1
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100
பணி: ஆராய்ச்சி உதவியாளர்(மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) - 1
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,16,600
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் பொது பிரிவினருக்கு 18 முதல 32க்குள்ளும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களஅ தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.exams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 9.9.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.7.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...