ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் அறிவியியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Centtral Electronics Engineering Research Institute-இல் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?


மத்திய அரசின் அறிவியியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Centtral Electronics Engineering Research Institute-இல் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 

பணி: விஞ்ஞானி (Scientist) 

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

தகுதி: Instrumentation, control system, Electronics, Electrical, software Technology, Electronics & communication, Embedded system, Microwave Electronics, Mechatronics போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.6.2023 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தகுதி, வயது, சாதி போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுபவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களளை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, CSIR-Centtral Electronics, Engineering Research Institute, Pilani, Jhunjhunu-333 031.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.6.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com