இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
By DIN | Published On : 26th June 2023 03:17 PM | Last Updated : 26th June 2023 03:17 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Archagar - 1
பணி: Ticket Seller - 1
பணி: Night watchman - 1
பணி: Thiruvakagu - 1
தகுதி: அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1 ஆண்டு பயிற்சி பெற்று தமிழில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 தேதியின் படி18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயல் அலுவலர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், காவிரி கரைபாளையம் ஈரோடு-635 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிதேதி: 30.6.2023.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...