12 வயதில் திருமணம், 16 வயதில் மீண்டும் சுயநினைவு!

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 16 வயது பெண் மீண்டும் தன் சுயநினைவை அடைந்துள்ளார்.
12 வயதில் திருமணம், 16 வயதில் மீண்டும் சுயநினைவு!
Updated on
1 min read

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 16 வயது பெண் மீண்டும் தன் சுயநினைவை அடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சுயநினைவு இழந்து மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 16 வயது பெண் திடீரென மீண்டும் தன் சுயநினைவை அடைந்தது அங்கிருந்தவர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. தனியார் சேவை அறக்கட்டளை ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாரால் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண், சுயநினைவு பெற்ற பின் தனது இருப்பிடம் குறித்து தெரிவித்துள்ளார். 

தனக்கு 12 வயதில் திருமணமாகி ஒரு மகன் இருப்பதாகவும், மாமியார் கொடுமையால் வீட்டில் இருந்து வெளியேறியவிட்டதாகவும், போஜ்பூர் சொந்த ஊர் என்றும் அந்த அறக்கட்டளை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர் புகைப்படங்களை அடையாளங்கண்டார்.

அந்த பெண்ணை பெற்றோரிடம் பத்திரமாக கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com