ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்கள் போல எதிர்கட்சிகள் செயல்படுகின்றன: பிரதமர் மோடி

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒரு விபத்து, பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தியதன் சாட்சியங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். 

News image
Updated On :6 மார்ச் 2019, 12:51 pm

பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒரு விபத்து, பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தியதன் சாட்சியங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்களைப் போன்று எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் நடைபெற்ற விமானப்படைத் தாக்குதல் தொடர்பாக நாட்டின் மக்கள் மட்டுமில்லாது உலகளவில் பலரும் நியாயமாக கருதும் நேரத்தில், நம்நாட்டில் ஒரு சிலருக்கு இந்த தாக்குதலில் விருப்பமில்லை. 

பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் இங்கு சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்குள்ள சிலர் என்னை விமர்சிப்பதன் மூலமாக பாகிஸ்தானில் உள்ள செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பிரபலமாகி வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்களாகியுள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.