மதுபோதையில் இருந்த பெண்ணிடம் இருந்து 2 மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்தில் மதுபோதையில் இருந்த பெண்ணிடம் 2 மாதக் குழந்தை இருப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி போலீஸார் அந்த போதைப் பெண்ணிடம் இருந்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த 2 மாதக் குழந்தையின் பெற்றோர்கள் தினக்கூலிப் பணி செய்பவர்கள் என்றும் அந்த போதைப் பெண் அந்த குழந்தையின் பாட்டி என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
முதல்நாள் இரவு வேலை முடித்த பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பாட்டி குழந்தையை தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு எரிச்சல் குணமாக...
வீட்டிலிருந்தபடியே வருமானம்...
குழந்தைகள் வடிவமைப்பு
கோலிவுட் ஸ்டூடியோ
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


