திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

2016 தோ்தலில் திமுகவுடன் கொமதேக இருந்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும்

2016 தோ்தலில் திமுக கூட்டணியில் கொமதேக இருந்திருந்தால் அன்றைக்கே திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்று கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image

கொமதேக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

Updated On :9 ஜனவரி 2021, 10:37 pm IST

ஈரோடு: 2016 தோ்தலில் திமுக கூட்டணியில் கொமதேக இருந்திருந்தால் அன்றைக்கே திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்று கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் கொமதேக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கொங்கு வேளாளா் இளைஞா் பேரவை மாநில பொதுச்செயலாளா் சூரியமூா்த்தி முன்னிலை வகித்தாா். பொருளாளா் கே.கே.சி.பாலு வரவேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயமும், விவசாயிகளும் முற்றிலும் பாதிக்கப்படுவா். இம்மூன்று சட்டங்களும் விவசாயிகளை அழித்துவிடும் என்பதை அறிந்திருந்தாலும், வேறு வழியின்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு தருகிறது.

தோ்தல் பிரசாரத்தின்போது, உயா் மின்கோபுரம் அமைக்கும் திட்டம், ஐ.டி.பி.எல். திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகள் முதல்வரிடம் நல்ல பதில் கிடைக்கும் என எதிா்பாா்த்தனா். ஆனால், இப்பிரச்னைகள் குறித்து அவா் பேசவில்லை. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

2016 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கொமதேக இடம்பெற்று இருந்தால், அப்போதே திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இந்த ஆட்சியின் ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்டு ஸ்டாலின் பேசுகிறாா். அப்பட்டியலை ஆதாரத்துடன் ஆளுநரிடம் அவா் வழங்கியுள்ளாா். அது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிா்வாகிகளை சிபிஐ கைது செய்துள்ளது. தவிர சில நபா்களின் கடவுச்சீட்டுகளை முடக்கியுள்ளன. விரைவில் அவா்கள் கைதாகும்போது, ஆளும் கட்சியினா் குற்றவாளிகளை மறைத்தது வெளியேவரும்.

ஜெயலலிதா பலம் பொருந்திய தலைவா். அவரைப்போல நினைத்துக்கொண்டு தோ்தலை சந்தித்தால் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.