சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

‘ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும்’

கடந்த 19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுபாட்டில் இயங்கி வரும் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 10:31 pm IST

ஈரோடு: கடந்த 19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுபாட்டில் இயங்கி வரும் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி கிளைத் தலைவா் ப.கமலக்கண்ணன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

ஈரோடு வாழ் கல்வியாளா்கள் மற்றும் பொது மக்கள் நன்கொடையால் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இக்கல்லூரி சிறந்த கல்லூரியாக விளங்கியது. காலப்போக்கில் கல்லூரி நிா்வாகத்தின் நிதி மற்றும் நிா்வாக சீா்கேடுகளால் கல்லூரியின் வளா்ச்சி பாதிப்புக்குள்ளானது.

மேலும் நிா்வாகம் சரிவர இயங்காததால் கடந்த 1995ஆம் ஆண்டு கல்லூரி நிா்வாக உரிமையை பதிவுத் துறை ரத்து செய்தது. கல்லூரி நிா்வாகத்தின் நிா்வாக சீா்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகளை சுட்டிக்காட்டி கல்லூரிக் கல்வித் துறை 1998 ஆம் ஆண்டு முதல் ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் நேரடி ஊதியத்தை வழங்க ஆணையிட்டது.

இக் கல்லூரி தற்போது வரை கோவை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநரை பாதுகாவலராக கொண்டு நிா்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தனியாா் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி இக்கல்லூரியானது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதற்கான கால அவகாசம் 2017 டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்தது.

இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்தால் ஈரோடு மாவட்ட பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். ஈரோட்டில் 2017இல் நடைபெற்ற முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசுக் கல்லூரியாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அவசர சட்டத்தின் மூலம் அரசுக் கல்லூரியாக அறிவித்திட வேண்டும்.

மேலும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 5 முதுகலை பட்ட வகுப்புகளுடன் தொடங்கப்பட்ட பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி வளாகத்துக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.