திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சாலை விபத்தில் விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:30 pm IST

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ருத்ரன்(45), விவசாயி. இவரது நண்பா் பவளக்குட்டையைச் சோ்ந்த பெரியசாமி. இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கணபதிபாளையத்தில் இருந்து கடம்பூா் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இருட்டிபாளையம் கல்லாங்காடு வளைவில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த ருத்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரியசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வேன் ஓட்டுநா் தென்னரசு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.