சுற்றுலா செல்ல அரசுப் பேருந்துகளை ஒப்பந்தம் செய்வது எப்படி?

ஒப்பந்த முறையில் அரசுப் பேருந்துகளை முன்பதிவு செய்வது பற்றி...
Govt chartered bus
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை குறைந்த வாடகையில் ஒப்பந்தம் செய்வது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்துக்குள் சுற்றுலா, திருமணம் போன்ற முன்பே திட்டமிட்ட நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள் ரயில், விமானம் போன்ற போக்குவரத்தில் செல்லும் பட்சத்தில் ரயில் நிலையங்களில் இருந்து சென்றுசேர வேண்டிய இடத்துக்கு மற்றொரு போக்குவரத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படும்.

அதனால், சில பயணங்களுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு வேன் அல்லது பேருந்தை முன்பே புக் செய்து பலரும் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், சுற்றுலா அல்லது சுற்றுப் பயணங்கள், திருமணங்கள், பள்ளி / கல்லூரி படிப்பு சுற்றுலா / குடும்ப உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் உல்லாசப் பயணம் போன்ற நோக்கங்களுக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் ஒப்பந்த முறையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு?

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள்...

1. அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ. 18,100 வசூலிக்கப்படுகிறது. 100 கி.மீ. வரை எவ்வித கட்டணம் இல்லை. கூடுதல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 40 வசூலிக்கப்படும். கதவுள்ள பேருந்து என்றால் ரூ. 21,500 வாடகை, கூடுதல் கி.மீ.க்கு ரூ. 45 கட்டணமாகும்.

2. ஏசி சீட்டர் பேருந்துகளுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ. 21,600 வசூலிக்கப்படுகிறது. 100 கி.மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 40 வசூலிக்கப்படும். கதவுள்ள பேருந்து என்றால் ரூ. 25,500 வாடகை, கூடுதல் கி.மீ.க்கு ரூ. 45 கட்டணமாகும்.

3. ஏசி சீட்டர் கம் ஸ்லீப்பர் பேருந்துகளுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ. 25,500 வசூலிக்கப்படுகிறது. 100 கி.மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 40 வசூலிக்கப்படும். கதவுள்ள பேருந்து என்றால் ரூ. 29,800 வாடகை, கூடுதல் கி.மீ.க்கு ரூ. 45 கட்டணமாகும்.

4. ஏசி அல்லாத ஸ்லீப்பர் கம் சீட்டர் பேருந்துகளுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ. 20,600 வசூலிக்கப்படுகிறது. 100 கி.மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 40 வசூலிக்கப்படும். கதவுள்ள பேருந்து என்றால் ரூ. 24,400 வாடகை, கூடுதல் கி.மீ.க்கு ரூ. 45 கட்டணமாகும்.

விதிமுறைகள்

பேருந்து எந்த பணிமனையில் இருந்து புறப்படுகிறதோ, அதே பணிமனைக்கு திரும்பி வரும் வரை கி.மீ. கணக்கிடப்படும்.

பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஒருநாள் வைப்புத் தொகையுடன் முழு தொகையையும் செலுத்த வேண்டும். (ஒருநாள் வைப்புத் தொகையை பயணத்தின் முடிவில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்)

முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தைவிட தாமதமாக வந்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

1 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை - வாடகை கட்டணத்தில் 25%

6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை - வாடகை கட்டணத்தி்ல் 50%

8 மணி நேரம் மற்றும் அதற்கு மேல் - வாடகை கட்டணத்தின் 100% தொகையை கூடுதலாக செலுத்த வேண்டும்


முன்பதிவு தொடர்புக்கு : 9445014463 / 9445014424 / 9445014416.

சென்னை மாநகரப் பேருந்துகள்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் எல்லைக்குள்பட்ட பகுதிகளுக்குள் பள்ளி மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு, நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு அரசுப் பேருந்து வாடகைக்கு விடப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ. பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒரு கி.மீ. ரூ. 55 வசூலிக்கப்படுகிறது. இரவு நேரம் என்றால் கூடுதலாக 25 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் அல்லது தனியார் நிகழ்ச்சிகளுக்கு எல்எஸ்எஸ் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் 73 பேருக்கு சென்றுவர இருவழித்தட கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

முன்பணமாக ரூ. 200 வசூலிக்கப்படும். அனைத்து கட்டணமும் டிடி மூலமாக போக்குவரத்து கழகத்துக்கு வழங்க வேண்டும்.

பயணத்தின் போது பேருந்தில் சேதம் ஏற்பட்டால், அதற்கான அபராதம் வசூலிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 044-23455858, 044-23455859,

8778065779, 94450 30515 என்ற எண்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

Summary

Let's take a detailed look about SETC and MTC Chartered Bus services

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com