இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.