திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்
திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு என முழக்கமிட்டு வழிபட்டனர்.

முதலில் யானை முகம் கொண்ட கஜமுகாசுரனை வதம் செய்த முருகர்.

இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்த முருகர்.

கந்த சஷ்டி திருவிழாவின் இறுதி நாளான இன்று, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த 'சூரசம்ஹாரம்' நடைபெற்றது.

வெற்றி வேல் வீரவேல் என விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம் எழுப்பி பக்தி பரவசமடைந்த பக்தர்கள்.

மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி ஜெயந்திநாதர் தன்னுள் ஆட்கொண்ட முருகர்.

மனிதர்களின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை அழித்து, இறைவனோடு கலக்கும் உயரிய தத்துவத்தையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை எட்டியது.

மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்ட முருகர்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

