மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ் ஸ்டில்ஸ்
மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ் ஸ்டில்ஸ்

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய தமிழ் தொடர் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகிறது.

திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும் என்ர கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த புதிய தொடர் அறிமுகமாகிறது.

பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்துள்ளனர்.

பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த அனுபவங்களை நகைச்சுவையான சூழல்களாக மாற்றியிருப்பதுதான் 'மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்' தொடரின் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

