கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 - புகைப்படங்கள்
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக முதல்வரும் பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தார்.
தனது குடும்பத்தினருடன் ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி.
மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவு செய்த கர்நாடக முன்னாள் முதல்வரான சித்தராமையா.
பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்தினருடன் வந்து பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவு செய்த நடிகர் யாஷ்.
தனது பெற்றோருடன் வந்து வாக்களித்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.
வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்களிக்க பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் மற்றும் அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர்.
மைசூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.
பெங்களூருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கை பதிவு செய்த இளம் பெண்கள்.
சிக்கமகளூருவில் திருமணம் முடிந்த நிலையில், ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மணமக்கள்.
வாக்களித்த பிறகு மை தடவிய விரலைக் காட்டும் பண்டிதர்கள்.