புதிய நாடாளுமன்ற கட்டடம் - புகைப்படங்கள்

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.  நான்கு மாடி கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ள இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Updated on
கட்டுமானத்துக்கு 26 ஆயிரம் டன் எஃகும மற்றும் 63 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதும், இதில் எம்.பி.க்கள் அமர போதிய இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பழைய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை, குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி ஆகியவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என அரசு கூறுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் தேசிய பறவையான மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.

பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.

நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின் போது 1,272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.

எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.

புதிய நாடாளுமன்ற திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர் ஆகும்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம் 2ல் தில்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை தில்லி எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தில்லியை இணைக்கும் பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளில் பல அடுக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com