இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் - ஆஷாமீரா ஐயப்பன் திருமணம் சென்னையில் இன்று (பிப்ரவரி 12, 2023) கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர்கள் ரத்னகுமார், ரவிக்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும், பி.எஸ்.மித்ரனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
புகைப்படத்தினைப் பதிவிட்டு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்தில் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் மற்றும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.