கல்கத்தா, ஏப். 23 - 300க்கு மேற்பட்ட ' ஊழியர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் சர்க்காரின் ஒப்புதலின்றி ”லே - ஆப்" அல்லது ஆட் குறைப்பு செய்யக் கூடாது என்று தடை விதிக்கும் சட்டம் மார்ச் 5ந்தேதி யன்று அமலுக்கு வந்தபிறகு, இந்தத் தொழிற்சாலைகளில் "லே -ஆப்" அல்லது ஆட் குறைப்பு எதுவும் நடக்கவில்லை என்று மத்திய தொழிலாளர் நல மந்திரி கே.வி. ரகுநாத ரெட்டி இன்று கூறினார்.
அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு, ஜூனிலிருந்து மார்ச் வரை ஆட் குறைப்பு அல்லது "லே - ஆப்” செய்யப்பட்டவர் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் என்றும் அவர் சொன்னார்.
நாட்டில் தொழிலுறவு நிலைமை கணிசமாக அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்றார்.
300 தொழிலாளர்களுக்குக் குறைவாக வேலை தொழிற்சாலைகளில் செய்யும் "லே - ஆப்" அல்லது ஆட்குறைப்பு நடந்திருக்கலாமல்லவா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் அவ்வாறு எதுவும் தமக்குத் தகவல் இல்லை என்றார். அம்மாதிரி ஏதாவது நடந்தால் தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் ராஜ்ய சர்க்கார் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
விவசாய பொருளாதாரம் பற்றி த.நா. அரசு ஆய்வு
மதுரை, ஏப். 24 - விவசாயிகளுக்கு விவசாயத்தில போதிய லாபம் கிடைக்கிறதா என்பதை அறிய உணவு தானிய உற்பத்தி பொருளாதாரம் பற்றி ஒரு ஆய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று கவர்னர் கே.கேம் ஷா இன்று மதுரையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
உற்பத்தியை ஊக்குவிக்க சர்க்கார் தம்மால் இயன்றதை அனைத்தையும் செய்யும் என்று தாம் விவசாயிகளுக்கு உறுதியளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு குறிப்பாக சராசரி விவசாயிகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உணவுதானிய விலையை சர்க்கார் குறைக்கும் போது ரசாயன உரம் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான பொருள்களின் விலையை குறைக்க வேண்டியது அவசியம் தான் என்பது பற்றியும் இந்த ஆய்வின்போது முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
மாநிலத்தில் பல்வேறு பண்டங்களின் விலையும் ஒரே சீராக இல்லாததைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு மாநிலம் முழுவதும் எல்லா நுகர்வோர் பண்டங்களுக்கும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயிப்பது பற்றி அரசு ஆராயும் என்று கவர்னர் ஷா தெரிவித்தார். ...
Summary
No Layoffs or Downsizing After New Law: Minister Informs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் என்ன பிரச்னை வந்தது? செங்கோட்டையன்
பிரசாரத்தில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய் இப்போது 'ஸ்லீப் மோடு'க்குச் சென்றுவிட்டார்! உதயநிதி

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

10.5.1976: பினாமி நிலம்: மத்திய சட்டம் வரும் - யார் பெயரில் உள்ளதோ அவருக்கே சொந்தமாக்க திட்டம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




