ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

17.8.1976 - மிஸா அவசர ஷரத்துக்கள் ஒரு வருடம் நீடிக்க மசோதா - லோக சபையில் நிறைவேறியது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

News image

17.8.1976 - Dinamani

Updated On :15 ஆகஸ்ட் 2026, 9:53 pm IST

புதுடில்லி, ஆக. 16 - நாட்டில் அவசர நிலையை ரத்து செய்ய தேதி குறிப்பிட இது உரிய காலமல்ல என்று உள்துறை மந்திரி கே. பிரம்மானந்த ரெட்டி இன்று லோக் சபையில் உள்நாட்டு பந்தோபஸ்து பராமரிப்பு இரண்டாவது திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில் கூறினார்

உள்நாட்டு பந்தோபஸ்து பராமரிப்பு சட்டத்தின் (மிஸா) அவசரநிலை ஷரத்துக்களை ஒரு ஆண்டுக் காலத்திற்கு விரிவுபடுத்த இந்தத் திருத்த மசோதா வகை செய்கிறது.

"எல்லாம் அமைதியாக உள்ளது என்று சொல்லிக் கொண்டு அவசர நிலையை திடீரென்று ரத்து செய்துவிட்டு, மெத்தனமாகி விடுவது நாட்டின் நலனுக்கு உகந்ததாக இராது. மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அமைதியாகக் காண்பது, ஆழ்ந்து பார்த்தால் அவ்வாறு இராமல் போகலாம். அவசரநிலை இராமல் பிரகடனத்தை அவசியப்படுத்திய நடவடிக்கைகளுக்கு காரணமான சக்திகள் மீண்டும் ஒன்று சேரக் கூடும். நமது தேச நலன்களிடம் அன்பு கொண்டிராத வெளிநாட்டுச் சக்திகளும் உள்ளன. இந்த விஷயத்தில் நிலவரத்தை முறையாகவும், நிதரிசனமாகவும் மதிப்பிடுவது அவசியம்" என்று பிரம்மானந்த ரெட்டி கூறினார்.

உள்துறை மந்திரியின் பதிலுக்கு பிறகு சபை மசோதாவை ஷரத்து வாரியாகப் பரிசீலனைக்கு எதித்துக் கொண்டது. பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டு பந்தோபஸ்து பராமரிப்பு திருத்த அவசரச் சட்டத்தை நிராகரிக்கக் கோரி இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபை நிராகரித்தது. ...

ஒவ்வொரு பகுதியிலுள்ள நிலைமைக்கு ஏற்ப திட்டம் தயாரிக்க வேண்டும் - டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி பிரதமர் பேச்சு

புதுடில்லி, ஆக. 16 - "இன்று போல் என்றுமே இந்தியா வலிமை மிக்கதாக இருந்ததில்லை. நாம் கண்காணிக்க வேண்டியதெல்லாம் நம்மிடமுள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி நமது மக்களும் நாடும் இன்னும் அதிக வேகத்தில் முன்னேற்றம் அடையச் செய்வதுதான்" என்று பிரதம மந்திரி, இந்திரா காந்தி நேற்று இங்கு கூறினார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை யொட்டி இங்குள்ள செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து நேற்று காலை திருமதி இந்திரா காந்தி நாட்டுக்கு உரை நிகழ்த்தினார்.

சொழும்புவில் கூட்டுச்சேரா நாடுகளின் உச்சகட்ட மாநாட்டின் முன்னுள்ள முக்கியமான பிரச்னை நாட்டு எல்லையைக் காக்கும் வெறும் விஷயமாக இராமல் விடுதலையைக் கட்டிக் காப்பது பற்றியும், நாடுகள் தங்களுக்கே உரிய லட்சியங்களை கடைப்பிடிப்பது பற்றியும், தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள பாதையில் முன்னேறுவது பற்றியுமானதாக இருக்கும் என்று திருமதி காந்தி மேலும் கூறினார்.

உறுதியுடனும், ஒற்றுமையுடயோடும் திடச்சித்தத்துடனும் செயல்பட்டால் வலுவற்றவர்கள் கூட ஒரு மகத்தான சக்தியாக உருவாகலாம் என்று குறிப்பிட்டார். ...

Summary

17.8.1976 - Bill to extend MISA emergency provisions by one year passed in the Lok Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.