
1.10.1976: காமன்வெல்த் நிதி மந்திரிகள் மகாநாடு - பணக்கார, ஏழை நாடுகள் வேற்றுமை அதிகரிப்பு பற்றி கவலை
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

1.10.1976 - Dinamani
ஹாங்காங், செப். 30 - பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே வேற்றுமைகள் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது என்று காமன்வெல்த் தலைமைச் செயலாளர் ஸ்ரீதத் ராம்பால் கூறினார். ஐ.நா. பொதுச் சபையின் 7-வது விசேஷக் கூட்டத்தின்போது உலக செல்வத்தை நியாயமான அளவில் விநியோகிப்பதற்காக பாடுர்ட உலக சமுதாயம் ஒப்புக்கொண்டதை அவர் நினைவுபடுத்தினார்.
மோதலைத் தடுப்பதிலும், சமூக நீதியை வளர்ப்பதிலும் உலகத்தின் மற்றப் பகுதிகளுக்கு ஒரு வழிகாட்டியை அளிக்கும்படி காமன்வெல்த்திலுள்ள நாடுகளை ராம்பால் கேட்டுக்கொண்டார். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காமன்வெல்த் நாடுகளில் இருக்கின்றார்கள்.
காமன்வெல்த் நிதி அமைச்சர்களின் மகாநாட்டின் துவக்கக் கூட்டத்தில் ராம்பால் பேசினார்.
நியூயார்க்கில் உருவான பொதுக் கருத்து சிதைந்துவிடும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முக்கியமான பிரச்னைகளைப் பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் வெவ்வேறு கோணங்களிலிருந்து நோக்குவதாகத் தோன்றுகிறது என்றார்.
வளரும் நாடுகளுக்குத் திறம்பட உதவும் பொருட்டு இப்போதுள்ள சர்வதேச நிதி ஸ்தாபனங்களைப் பலப்படுத்துவது அவசியம் என்று ராம்பால் குறிப்பிட்டார். இது விவாதத்தில் முக்கிய இடம் பெறவேண்டும் என்றார்.
இந்த ஆண்டு நடந்த சர்வதேச கூட்டங்களில் ஏழை நாடுகளுக்கு உதவி அளிப்பது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பின்தங்கிய நாடுகளுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார். ...
சாதகமாக தீர்ப்பு தர பெண்ணின் கற்பை லஞ்சம் கேட்ட நீதிபதி
ஹைதராபாத். செப். 29 - ஒரு வீட்டில் அத்துமீறி பிரவேசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பெண்ணுக்குத் தண்டனை விதிக்காமலிருக்க அவரைத் தன்னுடன் உடலுறவுக்கு அழைத்ததாக ஒரு மாஜிஸ்டிரேட் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஜிஸ்டிரேட் இன்று தீர்ப்பு வழங்குவதாயிருக்கையில் நேற்றிரவே கைது செய்யப்பட்டுவிட் டார்.
இந்த வழக்கில் செப். 27ந் தேதியே வாதப் பிரதிவாதங்கள் முடிந்துவிட்டன. புலன் விசாரணை நடத்திய சப்- இன்ஸ்பெக்டர் மூலம் "உடலுறவுக்கு வராவிட்டால் தண்டனை கிடைக்கும்" என்று மாஜிஸ்டிரேட் அந்தப் பெண்ணை மிரட்டினாராம்.
அந்தப் பெண் ஆந்திர அரசு செகரடரியேட்டில் வேலை பார்ப்பவர். சப்-இன்ஸ்பெக்டர், மாஜிஸ்டிரேட் இருவருடைய நிர்ப்பந்தச் சூழ்ச்சிகள் தாங்காமல் போலீஸ் டெபுடி கமிஷனரிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் வலைவீச்சு தொடங்கியது.
நேற்றிரவு ஏதாவதொரு ஓட்டலில் ஒரு அறை பிடிக்க ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டர், மாஜிஸ்டிரேட் மூவரும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். உயர்தர போலீஸ் அதிகாரிகளும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
முதலில் ஒரு மூன்று நட்சத்திர சொகுசு ஓட்டலுக்குச் சென்று ரூம் கேட்டார்கள். அங்கு அறை காலி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு இரவைக் கழிக்க மற்றோரிடத்துக்குச் சென்றனர். மாஜிஸ்டிரேட்டும் அந்தப் பெண்ணும் கீழே காத்திருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அறை முடிவு செய்ய மாடிக்குச் சென்றார். முடிவு செய்து கொண்டு மாடியிலிருந்து இறங்குகையில், போலீஸ் அதிகாரிகள் கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சப்-இன்ஸ்பெக்டர் தப்பியோடிவிட்டாராம்.
போலீஸ் அதிகாரிகள் உடனே செயல்பட்டு, மாஜிஸ்டிரேட்டை சுற்றி வளைத்துக்கொண்டு கைது செய்தார்கள். இன்று காலை சொந்த ஜாமீன் பேரில் மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யப்பட்டார்.
பெண்ணைத் தண்டிக்காமலிருப்பதற்கு லஞ்சமாக உடலுறவுக்கு - முயன்றதாயும், மற்ற ஊழல்களுக்காகவும் மாஜிஸ்டிரேட் மீதும், சப் இன்ஸ்பெக்டர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Summary
Commonwealth Finance Ministers Mahanadu - rich and poor countries concerned about widening disparity
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




